பூல்பூரில் 59,613 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி அபார வெற்றி..


உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர்.

எனவே காலியாக உள்ள இந்த இரு தொகுதிகளுக்கும் சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதே போன்று பிஹார் மாநிலத்தில் உள்ள அரேரியா மக்களவை தொகுதிக்கும் ஜகனாபாத், பபுவா ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பூல்பூர் தொகுதியில் தொடக்கம் முதலே எதிர்கட்சியான சமாஜ்வாதி முன்னிலை வகித்து வந்தது. இந்த தொகுதி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், சமாஜ்வாதி கட்சியின் நாகேந்திர பிரதாப் சிங் படேல், பாஜகவின் கவுசிலேந்திர சிங் படேலை விடவும்59,613 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

கோரக்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் உபேந்திர சுக்லாவை விடவும், சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீண் குமார் இதில் 23 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் வெற்றி பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.