வங்காளதேசத்தில் டிசம்பர் மாதம் 23ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வங்காளதேசத்தின் தலைமை தேர்தல் ஆணையர் நுருல் ஹூடா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வங்காளதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும். இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் நவம்பர் 19-ம் தேதி எனவும்,
வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் நவம்பர் 29-ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல் முதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சில குறிப்பிட்ட தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜதியா கட்சி ஆகியவை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை வரவேற்றுள்ளன.