
மேல்மருவத்தூரில் நேற்று மறைவுற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு. பங்காரு அடிகளார் அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது துணைவியாரும் ஆதிபராசக்தி அறக்கட்டளை துணைத் தலைவருமான திருமதி லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்கள், துரைமுருகன்,பொன்முடி,நேரு அஞ்சலி செலுத்தினர்.