ஃபானி புயல் : தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..

ஃபானி புயலால்  தமிழகம் மற்றும் புதுவைக்கு ஏப்ரல் 30, மே 1 ஆகிய இருநாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

தமிழகம் மற்றும் புதுவையில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கன மழை பெய்யும் என்பதால் முன் எச்சரிக்கைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது

சனிக்கிழமை உருவாகும் புயல் காரணமாக ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சனிக்கிழமை, புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமையில், அதிகனமழை பெய்யும் என எச்சரித்திருக்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய பெருங்கடலையொட்டிய, தென்கிழக்கு வங்க கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வெள்ளிக்கிழமை இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தமிழ்நாட்டின், வடமேற்கு மற்றும் இலங்கையின் கிழக்கு கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சனிக்கிழமை, புயலாக மாறும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

இவ்வாறு உருவாகும் புயல் சின்னம், அது உருவானதிலிருந்து, 72 மணி நேரத்தில், அதாவது, திங்கட்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை காலை வேளையில்,

தமிழ்நாட்டின் வடக்கு கடலோர பகுதிகளை நெருங்கும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இன்றிரவு முதலே, மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல கூடாது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருக்கிறது.

மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில், அடுத்த 48 மணி நேரத்தில், கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தெரிவித்திருக்கிறது.

சனிக்கிழமை உருவாகும் புயல் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், வருகிற 30ஆம் தேதியும், மே ஒன்றாம் தேதியும், அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கூறியிருக்கிறது.

இதனிடையே, சனிக்கிழமையன்று உருவாக உள்ள புயல் சின்னத்திற்கு, ஃபானி என பெயர் சூட்டப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனிடையே, சனிக்கிழமையன்று உருவாக உள்ள புயல் சின்னத்திற்கு, ஃபானி என பெயர் சூட்டப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.