வங்கி கணக்கு தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் ஆதார் அடையாள அட்டையை விருப்பப்பட்டவர்கள் வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது.
இந்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாத நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.
இதைத்தொடர்ந்து இதுதொடர்பான அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு ஒப்புதல் பெற மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகள் பெறும்போது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.