வங்கிகளை இணைக்கும் திட்டம் சரியானது அல்ல: வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் பேட்டி

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் தீவிரமாக்கப்படுவது உறுதி என்று வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறியுள்ளார்.

மேலும் வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என்றும், ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு அரசாங்கம் தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், பெரிய வங்கிகள் ஏழைகளுக்கு கடன் தராது. எனவே சிறிய வங்கிகளை இணைத்து பெரிய வங்கியாக மாற்றுவது ஆபத்தானது என தெரிவித்தார்.

வங்கிகளை இணைக்கும் அரசின் திட்டம் சரியானது அல்ல என அவர் கூறினார்.

இதனை எதிர்த்து, பரோடா வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கிகளை இணைக்க ஊதியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு..

கர்ப்பிணிக்கு ஹச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைப்பு…

Recent Posts