ரிசர்வ் வங்கி தலைவர் சக்தி காந்த தாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் ரிசர்வ் வங்கி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 31-வரை வங்கி கடன் தவணையை செலுத்த அவகாசம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே மார்ச் , ஏப்ரல்,மே என 3 மாதம் அவகாசம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி தற்போது சூன்,சூலை,ஆகஸ்ட் வரை நீட்டித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 குறைத்து 4 சதவிகிதமாக அறிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி இந்த வருடம் குறைவாக இருக்கும் என்று தெரிவித்த அவர் பருப்பு விலை உயரலாம் என்றார்