பேங்க் ஆப் பரோடாவுடன், தேனா வங்கி, விஜயா வங்கிகள் இணைப்பு : மத்திய அரசு அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளாக, தேனா வங்கி , விஜயா வங்கி மற்றும் BANK OF BARODA வங்கிகள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாராக்கடன் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், தேனா வங்கி , விஜயா வங்கி மற்றும் BANK OF BARODA வங்கிகள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய நிதித்துறை செயலாளர் ராஜிவ் குமார்,  இந்த இணைப்பு மூலம் இந்தியாவின் முன்றாவது மிகப்பெரிய வங்கியாக  BANK OF BARODA வங்கி உருவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு வங்கிகளை இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.