
இந்தியாவில் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் முதன்னிலை அதிகாரிகள் தேர்வில் எழுத்து தேர்வில் வங்கிகள் தனியார் மயமாவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எழுத வேண்டும் என கேள்வி கேட்டுள்ளது.
இந்த கேள்வி வங்கி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ஒன்றிய அரசின் தனியார்மய கொள்கைக்கு எதிராக பொதுத்துறை வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில்
“வங்கிகளை தனியாருக்கு விற்பதால் ஏற்படும் நன்மைகள்” குறித்து கட்டுரை வரையக் கோரி SBI PO முதன்மைத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஏற்கனவே சிபிஎஸ்இ தேர்வில் பெண்கள் குறித்த கேள்வி இடம் பெற்று சர்ச்சையானது. அதுபோல் தற்போது வங்கி அதிகாரிகள் தேர்வில் நடந்துள்ளது.