முக்கிய செய்திகள்

வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம் வாபஸ்..


மாா்ச் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக வங்கி ஊழியா் தொழிற்சங்கங்கள் தொிவித்துள்ளன.

வங்கி ஊழியா் தொழிற்சங்கங்கள் வருகிற மாா்ச் 15ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தன. இந்நிலையில் கடந்தவார இறுதியில் நடைபெற்ற தொழிற்சங்க கூட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அனைத்து இந்திய வங்கி ஊழியா்கள் சங்க பொது மேலாளா் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் மிகப்பொிய அளவில் நடந்துள்ள முறைகேடு கவலை அளிக்கிறது. இந்த ஊழல் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடாமல் அந்த ஊழலுக்கு வங்கியில் பணியாற்றும் ஊழியா்கள் சிலரை பொறுப்பாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. இவை ஏற்புடையதல்ல.

இதனால் வங்கி அமைப்பில் தற்போது நலவும் சூழ்நிலை உள்ளிட்டவற்கை கருத்தில் கொண்டு மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் திருப்பப் பெறப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.