முக்கிய செய்திகள்

வங்கி ஊழியர்கள் ஜனவரி 8ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்…

2020ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இந்தியாவின் பெரும்பாலான வங்கி ஊழியர்களின் சங்கங்கள்

தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்களின் சம்மேளனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளத்தின் பொதுச் செயலர் சி.எச். வெங்கடாச்சலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில, ஊழியர்களின் நலனுக்கு எதிராக ஊழியர்கள் விதிகளில் திருத்தம் செய்யக் கூடாது,

பணிப் பாதுகாப்பு, புதிய பணி வாய்ப்புகளை உருவாக்குதல், இவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும் வங்கி ஊழியர்களின் 10 சங்கங்கள், ஜனவரி 8ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தில், ரிசர்வ் வங்கியின் ஊழியர்கள், கூட்டுறவு வங்கி, ஊரக வங்கிகள், எல்ஐசி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களும் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.