முக்கிய செய்திகள்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கருப்புக்கொடி : திமுகவினர் கைது


தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித், நாமக்கல் பேருந்து நிலையத்தில் தூய்மையை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பேரணியைத் தொடக்கி வைத்தார். அதன்பின் பரமத்தியில் உள்ள தனியார் கல்லூரியில் உலக யோகாசன நாளையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிக்காகப் புறப்பட்டார்.

அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் காந்தி செல்வன், பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் தலைமையில் திமுகவினர் ஐந்நூற்றுக்கு மேற்பட்டோர் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டியதுடன் கருப்பு பலூன்களையும் பறக்கவிட்டனர். மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாகக் கூறி ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்ட அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.