முக்கிய செய்திகள்

பொங்கலுக்கு முன்பு போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனையை தீருங்கள் : உயர் நீதிமன்றம் மதுரை கிளை..


போக்குவரத்து தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போக்குவரத்த ஊழியர்கள் நேற்று இரவு முழுவதுமே பேருந்துகளை இயக்காமல் புறக்கணித்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்தனர்.இன்று காலை முதலே போராட்டம் தொடர்வதால் தமிழகத்தில் 90 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை.

இந்நிலையில் பொங்கலுக்கு முன்பு போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.