பெல்ஜியம் பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டு பதவியேற்றவர் சார்லஸ் மைக்கேல். பெல்மிஸ்ட் கூட்டணி கட்சியுடன் ஆட்சி நடத்தி வந்த சார்லஸ்,
அண்மையில் அகதிகள் தொடர்பான ஐ.நா ஒப்பந்தத்துக்கு ஆதரவு அளித்தார்.
இதனால், எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, சார்லஸ் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை, கூட்டணி பெல்மிஸ்ட் தேசிய கட்சி வாபஸ் பெற்றது.
இதனால், பெரும்பான்மை இல்லாத அரசாக, சார்லஸ் மைக்கேலின் அரசாங்கம் மாறியது. இதனைத் தொடர்ந்து,
நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன.
இந்த நிலையில், மைக்கேல், மன்னர் பிலிப்பிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.
வருகிற மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் பிரதமர் பதவி விலகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
பிரதமர் ராஜினாமா கடிதத்தை ஏற்கும் முன் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று மன்னர் இல்லம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.