வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்லி புயல் காரணமாக ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில்
அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் ஒடிசா மாநிலத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை டிட்லி புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலானது ஆந்திர மாநிலம் மற்றும் ஒடிசா நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இரு மாநிலங்களிலும் அதிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இன்று இரவு முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு இந்த கனமழை தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒடிசா மற்றும் ஆந்திர மாநில கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகரும்படியும், மீனவர்கள் இன்றுமுதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், தனியார் வானிலை ஆய்வுமையம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த டிட்லி புயலானது ஒடிசாவின் கோபால்பூர் வழியாக கரையை கடக்கும் என குறிப்பிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஒடிசா மாநிலத்துக்கு தயார் நிலையில் இருக்கும்படி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.