பெங்களுரு சிறையில் சசிகலா-சந்திரலேகா சந்திப்பால் தடம்மாறும் அமைச்சர்கள்…

பெங்களுரு சிறையில் உள்ள சசிகலாவை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியன் தீவிர ஆதரவாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சந்திரலேகா சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தியதே சந்திரலேகாதான். இவரிடம் தான் சசிகலா கணவர் மறைந்த நடராஜன் உதவியாளராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

சசிகலா-சந்திரலேபகா சந்திப்பு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

இந்த சந்திப்பிற்கு பிறகு தான் தமிழக அமைச்சர்கள் தங்கள் பேச்சுகளில் சசிகலா குறித்து பேச ஆரம்பித்து விட்டனர்.

அமைச்சர் ஜெயக்குமாரைத் தவிர மற்ற அமைச்சர்கள் சிலர் சசிகலாவை கட்சியல் சேர்க்க அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் முடிவெடுப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால்இதற்கு ஒருபடி மேலே போய் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , சசிகலா தெய்வத்தின் முன் நிரபராதி எனத் தெரிவித்துள்ளார்.

சசிகலா சிறையிலிருந்து வர ஒருவருடம் இருக்கும் நிலையில் நன்நடத்தை காரணமாக முன் கூட்டியே விடுதலை செய்யப்படலாம் என்ற நிலையில் தமிழக அமைச்சர்களின் பேச்சு தடும் மாறி பேசுவதைப் பார்க்கும் போது அதிமுகவில் சசிகலாவின் நுழைவு இருக்கலாம் எனத் தோன்றுகிறது

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா சந்திப்பின் போது சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்த்து கட்சியைப் பலப்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் உலா வருகின்றன..

தினகரனின் செயல்பாட்டில் அதிருப்தியுடன் இருக்கும் சசிகலா அதிமுகாவில் இணைவார் என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.