வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு ஒடிசா நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.