
தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசை நோக்கி மெதுவாக நகர்ந்து நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் எனப் பெயரிட்டுள்ளது. புயல் மெதுவாக நகர்ந்து இன்று இரவு காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக்கடக்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலானது கரையை நெருங்கும் போது 90 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் காலை முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.