NEFD (National foundation for entrepreneurship development ) என்ற அமைப்பு சிறந்த கல்விப் பணியாற்றியவர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று விருது வழங்கி கௌரவித்தது. பேராசிரியர் முனைவர் மெ.மெய்யப்பன் அவர்களுக்கும் விருது வழங்கி கௌரவப்படுத்தியது.
பேராசிரியர் முனைவர் மெ.மெய்யப்பன் அவர்கள் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரியில் இயல்பியல் துறைத் தலைவராக பணியாற்றியவர்.
33ஆண்டுகள்அரசு கல்லூரிகளில் பேராசியர் பணி, 30 ஆய்வுக் கட்டுரைகள், 3 முனைவர்(பி எச்டி) பட்டம் , 350 பொது அறிவியல் கட்டுரைகள், 56 பொது அறிவியல் நூல்கள் படைத்தவர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி, க.அன்பழகன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், போன்றோர்களிடம் விருதும், பரிசும் பாராட்டும் பெற்றவர்.
தற்போது ஒயிஸ் மென் கிளப், ரோட்டரி கிளப் சிறந்த கல்விப் பணியாற்றியமைக்காக National foundation for entrepreneurship development , விருது வழங்கியுள்ளது.
விருது வழங்கும் விழா செப்டம்பர் 5, 2018 அன்று கோயம்புத்தூர், கோவை அவினாசி சாலையில் உள்ள ஜென்னி ரெசிடென்சியில் மாலை 2.15 மணி அளவில் நடைபெற்றது.
விழாவில் பேராசிரியர் முனைவர். மெ.மெய்யப்பன் பாராட்டும்,விருதும் வழங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் தலைவர் KVJ.Prof.Dr.கணேசன் தன்னார்வத் தொண்டாக 60 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி வாழ்த்திப் பேசினார்.