திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முறைப்படி அறிவிக்கப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் இதனை அறிவித்தார்.
அப்போது, பொதுக்குழுவில் பங்கேற்றுள்ள திமுக நிர்வாகிகள் கரவொலி எழுப்பி, ஆரவாரம் செய்து அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை, பொதுக்குழுக்கூட்டம் நடைபெறும் அண்ணா அறிவாலயத்துக்கு வெளியே திரண்டு இருந்த ஏராளமான திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.