
சிவகங்கை மாவட்ட காரைக்குடியில் இந்திய ஒற்றுமை பயணம் ஒராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. பேரணி காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி கல்லுக்கட்டி, செக்காலை ரோடு வழியாக கல்லுாரி சாலையில் உள்ள இராஜீவ் சிலை வரை நடைபெற்றது.

இப்பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சா.மாங்குடி,

சிவகங்கை மாவட்ட தலைவர் ஏ.சி. சஞ்சய் காந்தி, நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், நகர்மன்ற உறுப்பினர் அமுதா, காங்கிரஸ் நிர்வாகிகள் குமரேசன், கொத்தமங்கலம் காந்தி, அப்பச்சி சபாபதி, ஜெயபிரகாஷ்,சண்முகதாஸ், காரை பாலா, மாஸ்மணி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரவீன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்