பாரத்நெட் டெண்டர் மத்திய அரசு ரத்து : டிடிவி தினகரன் வரவேற்பு..

தமிழக கிராமங்களுக்கு அதிவேக இணைய சேவை வழங்க பாரத் நெட் கோரிய டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வரவேற்றுள்ளர்.
இது குறித்து அவரது டிவிட் பதிவில்..

தமிழகத்தில் கிராம ஊராட்சிகளை இண்டர்நெட் மூலம் இணைப்பதற்காக ரூ.1,950 கோடிக்கு பழனிசாமி அரசு வெளியிட்டிருந்த பாரத் நெட் டெண்டரில் விதிமீறல் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மத்திய அரசு அந்த டெண்டரை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது. .

குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களுக்காக இந்த டெண்டர் விதிமுறைகளை பழனிசாமி அரசு சட்ட விரோதமான முறையில் மாற்றியதாக பல்வேறு தரப்பினரும் எழுப்பிய குற்றச்சாட்டுகள் இதன் மூலம் உண்மையாகியிருக்கின்றன.

இது ஆரம்பம்தான்..! துறைகள் தோறும் பங்காளிகள், சம்பந்திகள் எனச் சுற்றத்திற்காக இஷ்டம் போல வாரி வழங்கப்பட்ட டெண்டர்களில் உள்ள முறைகேடுகள் இனி ஒவ்வொன்றாக வெளியில் வரும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

பாரத்நெட் டெண்டர் மத்திய அரசு ரத்து : அமைச்சர் உதயகுமார் ராஜினாமா செய்வாரா?: ஸ்டாலின் கேள்வி..

”கரோனாவிடம் சரணடைந்துவிட்டார் மோடி” : ராகுல் காந்தி விமர்சனம் ..

Recent Posts