முக்கிய செய்திகள்

`பிக்பாஸ் வீட்டிற்க்குள் மீண்டும் ஓவியா?’ : விஜய் டிவி வெளியிட்ட வீடியோ..


நடிகை ஓவியா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார். அதனை உறுதிப்படுத்தி விஜய் தொலைக்காட்சி ட்வீட் போட்டுள்ளது.
பலத்த எதிர்பார்ப்புக்கிடையே பிக் பாஸ் சீசன் 2 இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. இதில் யார் கலந்துகொள்ளப் போகிறார்கள் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் பிக் பாஸ் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. இதுவரை பவர் ஸ்டார் சீனிவாசன், தாடி பாலாஜி, அவரது மனைவி கலந்துகொள்ளப்போவதாக உறுதியான தகவல் வெளிவந்தாலும், அவர்களைத் தவிர நடிகர் பரத் மற்றும் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள் என தகவல் பரவி வருகிறது. இதுஒருபுறம் இருக்க, நிகழ்ச்சியை புரோமோட் செய்யும் வேலைகளில் விஜய் தொலைக்காட்சி ஆர்வம் காட்டிவருகிறது. அந்தவகையில் தினமும் பிக் பாஸ் 2 குறித்த செய்திகள், புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருந்து. நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் நடிகர் கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பது போன்ற வீடியோ அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது வைராலகி வருகிறது.