பிறப்புச் சான்றிதழ் : கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல் பாராட்டு..


பிறப்புச் சான்றிதழ் குறித்த கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழில் சாதி, மதத்தைக் குறிப்பிடத் தேவையில்லை என்று அம்மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதைப் பாராட்டி கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”மீண்டும் கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கை. உங்கள் சுற்றறிக்கை வரலாற்றுப்பூர்வமானது. நான் என் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழில் சாதி, மதத்தைக் குறிப்பிட மறுத்துவிட்டேன். என் மகள்கள் 21 வயதைக் கடந்த பிறகு ஸ்ருதி ஹாசன் இந்து மதத்தைத் தேர்வு செய்தார். அக்‌ஷரா ஹாசன் சாதி, மதம் இல்லாமல் வாழ முடிவெடுக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.


 

இனி.. ஜாமின், முன்ஜாமீன் மனுக்களில் வழக்கறிஞர்கள் கையெழுத்து கட்டாயம் : உயர்நீதிமன்றம் உத்தரவு..

தொண்டைமான் பெயர் விவகாரம் : சுஷ்மா ஸ்வராஜுக்கு ஸ்டாலின் கடிதம்..

Recent Posts