முக்கிய செய்திகள்

நயன்தாராவுக்கு பிறந்த நாள்… லேடி சூப்பர் ஸ்டார் என புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

நயன்தாராவுக்கு இன்று (18.11.17) பிறந்த நாள். தன்னுடைய நண்பர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடி வருவம் நயன், ட்விட்டரில் சில படங்களையும் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையர் சாவித்ரி, பத்மினி, சரோஜாதேவி போல் நீண்ட நாள் நாள் நிலைத்து நிற்கும் கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா! அண்மையில் அவர் நடித்து வெளி வந்த அறம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனிடையே, அவரது பிறந்த நாளான இன்று வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ரசிகர்களும், கோலிவுட் வட்டாரத்தினரும் அவரை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என புகழ்ந்து தள்ளுகின்றனர்.

நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டிருக்கும் படங்கள்…