இனி இணையதளம் மூலமாக மட்டுமே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கடந்த 2000ம் ஆண்டு முதல் வருவாய்துறை அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகங்கள் மூலமாக வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு சேவை வழங்குவதற்காக தனியாக “பிக்மி” என்ற மென்பொருள் சேவை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கா்ப்பிணிகளுக்கு தேவையான அரசின் சலுகைகள் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் விநியோகம் செய்ய ஏற்கனவே பயன்படுத்தி வந்த மென்பொருளோடு, கா்ப்பிணிகள் கணக்கிடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் இரண்டு மென்பொருள்களையும் ஒருங்கிணைக்கப்பட்டதை பொதுவானதாக பயன்படுத்தலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.