முக்கிய செய்திகள்

பாஜகவுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு…


டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆலேசானை நடத்தினார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று பாஜக கூட்டணியில் இருந்த சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கை ஏற்கபடாத நிலையில், அக்கூட்டணி கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று முதன்முதலாக சந்திரபாபு நாயுடு டெல்லி சென்றார். பின்னர், எதிர்க்கட்சி தலைவர்கள் காங்கிரஸ் வீரப்ப மொய்லி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதிப் பந்தோபாத்யாய், அதிமுக எம்.பி மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.

இதனையடுத்து, இன்று காலை டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலை சந்தித்து பேசியுள்ளார்.