பாசிச பாஜக ஒழிக என முழக்கமிடுவோரையெல்லாம் மாநில அரசு கைது செய்யும் என்றால், நானும் பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிடுகிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் குறிப்பிட்டிருப்பதாவது:
ஜனநாயக விரோத – கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!
அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?
நானும் சொல்கின்றேன்!
“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” https://t.co/JoPajdrSW5
— M.K.Stalin (@mkstalin) September 3, 2018