பாஜக ஆட்சியில் மக்களின் கருத்துரிமை, பேச்சுரிமை சிதைந்துள்ளது : பல்கலை முன்னாள் துணை வேந்தர்கள், முன்னாள் நீதிபதிகள் பேட்டி

மத்திய அரசு அலுவலகங்களில் பாஜக-வின் தலையீடு அதிகரித்துள்ளது: பல்கலை முன்னாள் துணை வேந்தர்கள், முன்னாள் நீதிபதிகள் பேட்டி..

மத்திய அரசு அலுவலகங்களில் பாஜக-வின் தலையீடு அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்கள், முன்னாள் நீதிபதிகள் கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு யாரும் ஓட்டுப்போட வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். பாஜக அரசு சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறது.

அரசு அமைப்புகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர் வசந்தி தேவி பேட்டியளித்துள்ளார்.

மக்களின் கருத்துரிமை, பேச்சுரிமை, நாட்டின் பன்முகத்தன்மை சிதைந்துள்ளது என்றும் வசந்தி தேவி தெரிவித்துள்ளார்.

சனாதன கலாச்சாரத்தை நிறுவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பள்ளிகளில் நச்சுக்கருத்துக்களை பாஜக புகுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் கருத்துள்ளவர்களே கல்விக்குழுமங்களின் தலைவர்களாக உள்ளனர்.

இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனத்தில் வரலாறு தெரியாதவர்களே பணியில் உள்ளனர். கல்வியை மத்திய அரசின் அதிகார பட்டியலில் கொண்டு செல்ல பாஜக முயற்சி செய்கிறது என்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

மாநில அதிகாரத்தில் உள்ள பல்கலையில் நுழைய மத்திய அரசு முயற்சி செய்கிறது.

விழுப்புரத்தில் வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரை..

சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என்று பெயர் மாற்றம் : தமிழக அரசு அரசாணை வெளியீடு

Recent Posts