பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ் மீண்டும் ஒரு சர்ச்சை பேச்சு..

டெல்லி ஜமா மசூதியை இடியுங்கள், அங்கு இந்துக் கடவுள் விக்கிரகங்கள் இல்லையெனில் என்னை தூக்கிலிடுங்கள் என பாஜக எம்.பியின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ் மீண்டும் ஒரு சர்ச்சைப் பேச்சில் சிக்கியுள்ளார்,

அதாவது டெல்லியில் உள்ள ஜமா மசூதியை இடித்தால் மாடிப்படியின் கீழ் இந்துக் கடவுள்களின் சிலை இருக்கும் என்று பேசியுள்ளார்.

மேலும் இடித்துப் பார்த்து அங்கு சிலைகள் இல்லையெனில் என்னைத் தூக்கிலிடுங்கள் என்று ஆவேசமாகப் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

“நான் அரசியலில் நுழைந்த போது நான் மதுராவில் என் முதல் அறிக்கையை வெளியிட்டேன்.

அயோத்தி, காசி, மதுராவை விட்டு விடுவோம், டெல்லியில் உள்ள ஜமா மசூதியை இடியுங்கள் மாடிப்படியின் கீழ் விக்கிரகங்கள் இல்லையெனில் என்னைத் தூக்கிலிடுங்கள் என்று கூறியிருந்தேன்,

இன்றும் அந்த நிலைப்பாட்டில்தான் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

முகலாயர்கள் இந்துக்கோயில்கள் பலவற்றை அழித்து நாடு முழுதும் சுமார் 3000 மசூதிகளை கட்டினர் என்று சாடினார் சாக்‌ஷி மகராஜ்.

இதற்கிடையே மற்றொரு பாஜக எம்.பி. ரவீந்திர குஷ்வாஹா, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் அயோத்தி ராமர் கோயில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் ராஜ்யசபாவில் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டால் அவசரச் சட்டம் கொண்டு வருவோம் என்றும் சர்ச்சைக்கருத்தை வெளியிட்டுள்ளார்.