
காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா அதிமுக பாஜக கூட்டணி சார்பில் இன்று தேவகோட்டையில் தேர்தல் அதிகாரி சுரேந்திரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இது போல் அமமுக கட்சியின் சார்பில் தேர்போகி பாண்டி இன்று தேவகோட்டையில் தேர்தல் அதிகாரி சுரேந்திரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரைமாணிக்கம் தேவகோட்டையில் தேர்தல் அதிகாரி முன் விவசாயிகள் போல் முண்டாசு கட்டி தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.

துரைமாணிக்கம் தனது வேட்பு மனு தாக்கல் செய்யும் முன் தேவகோட்டை நகர் முழுவதும் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.