முக்கிய செய்திகள்

பாஜக ஆட்சியில் சீரழிக்கப்படும் பெண்கள்: குஷ்பு ஆவேசம்..

 


பாஜக ஆட்சி குறித்து, நடிகை குஷ்பு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பாஜகவினரே பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர். பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்க மத்திய அரசு தவறி விட்டது. இதுகுறித்து பேசாமல் மோடி ஏன் மௌனம் காக்கிறார்.

பெண்கள் இல்லாத நாட்டை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளதா? கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள அதிமுக கண்டிப்பாக ஜெயிக்கப் போவதில்லை.