
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கட்சி கொடுத்த பணத்தை செலவு செய்யாமல் ஆட்டையைப் போட்டதாக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவிற்கு எதிராக போர்க்கொடி துாக்கினர் சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள்.

இந்த குற்றச்சாட்டையடுத்து பாஜகவிலிருந்து காரைக்குடி நகர தலைவர் சந்திரன் உள்பட பாஜக நிர்வாகிகள் பலர் நீக்கப்பட்டனர்.
காரைக்குடி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காரைக்குடி நகர தலைவர் சந்திரன், கண்ணங்குடி ஒன்றிய பாஜக தலைவர் பிரபு அவர்கள் சாக்கோட்டை ஒன்றியம் பாஜக தலைவர் பாலமுருகன் உள்பட பாஜக நிர்வாகிகள் காங்கிரசில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் காரைக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் காங்கிரஸ்தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவருமான கே.ஆர். ராமசாமி , காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி , திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம் மற்றும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. சத்யமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். கட்சியில் இணைந்த அனைவருக்கும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கினார் கார்த்தி சிதம்பரம்..
செய்தி & படங்கள்
சிங்தேவ்