முக்கிய செய்திகள்

குஜராத்தில் நீண்ட இழுபறிக்குப் பின் பாஜகவுக்கு கிடைத்த 99!

ஒரு வழியாக குஜராத்தில் 99 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது பாஜக. காங்கிரசுக்கு 77 இடங்கள் கிடைத்துள்ளன. மாலை வரை ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 92 இடங்களை பாஜக பெற்று விடுமா என்ற கேள்வியும், இழுபறியும் நீடித்தது. நீண்ட  நேரத்திற்குப் பின்னர் மெல்ல, மெல்ல 99இடங்களை எட்டியது. அப்போதும் 100ஐத் தொட முடியாமல் போனது. எனினும், 20 ஆண்டு இடைவெளியை நிரப்ப ராகுல்காந்தி எடுத்துக் கொண்ட கடும் முயற்சிக்கு பலன் கிட்டாமல் இல்லை. வலிமையான எதிர்க்கட்சியாக குஜராத்தில் காலூன்றி இருக்கிறது. 

BJP Retain the power in Gujarath