
வேல் யாத்திரை வாகனத்துடன் எல்.முருகன் திருத்தணி நோக்கி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தொடங்கிய வேல் யாத்திரைக்கு காவல்துறை திடீர் அனுமதி அளித்துள்ளனர்.
பூந்தமல்லி அருகே எல்.முருகனை தடுத்து நிறுத்த காத்திருந்த காவல்துறை திடீரென அனுமதி அளித்தது. வேல் யாத்திரை பிரசார வாகனத்துடன் 6 வாகனங்கள் உடன் செல்லவும் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
வேல்யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும் என பாஜக தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.