உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜகவை வெற்றியடையச் செய்த உ.பிஸ்!

உள்ளாட்சித் தேர்தலிலும் உத்தரப்பிரதே மக்கள் (?) பாஜவுக்கு வெற்றியை அள்ளித் தந்துள்ளனர். கோரக்பூரில் குழந்தைகள் இறந்தால் என்ன, மதவாதம் தலைவிரித்தாடினால் என்ன,, பாஜகவின் பாதங்களில் வீழ்வது என உத்தரப்பிரதேச மக்கள் ஒரு முடிவோடு உள்ளனர்.

உ.பியின் 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சிகளை பாரதிய ஜனதா கைப்பற்றியுள்ளது. வாரணாசி, கோரக்பூர், காசியாபாத், பெரேலி, ஆக்ரா, ஃபெரோஜாபாத் (Firozabad), அயோத்தியா, மதுரா, லக்னோ, கான்பூர், சகாரான்பூர், ஜான்சி, மொராதாபாத், அலகாபாத் ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை பாஜக தன்வசப்படுத்திக் கொண்டது. அலிகார், மீரட் ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் மட்டும் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றியடைந்துள்ளது. நகராட்சிகள், ஊராட்சிகள் அளவிலும் பாரதிய ஜனதாவே அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளது.

ராகுல்காந்தியின் தொகுதியான அமேதி நகராட்சியில், காங்கிரஸ் தோல்வியடைந்திருப்பது, அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் வெற்றி , மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்க தமக்கு மேலும் ஊக்கமளிக்கும் என பிரதமர் மோடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

 

BJP win in UP civic poll

 

முத்தலாக் சொன்னால் மூன்றாண்டு சிறை!

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்..

Recent Posts