இரத்த சோகை உலகை பிடித்த பீடையாகவே உள்ளது. இந்தியாவில் 80 சதவிகித பெண்குழந்தைகள் போதிய சத்தான உணவின்றி இரத்த சோகையால் பாதிப்படைந்து உள்ளனர். இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த சோகையைப் போக்க இயற்கை முறையில் எளிய குறிப்புகள்
- இரத்தம் நன்கு உற்பத்தியாக ஒரு டம்ளர் நல்ல தண்ணீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருகிவர இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
2.பேரீச்சம் பழத்தைத் தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இரத்தம் ஊறும்.
3.நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இரத்தம் ஊறும். - சக்கரவர்த்தி கீரை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியடையும்.
- முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.
- வல்லாரை இலைகளை நன்கு அரைத்து சாறு எடுத்து அதை தேன் கலந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமாகி,இரத்தம் விருத்தியாகும்.
- பீட்ரூடை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு வேகவைத்து மசிந்து வடிகட்டி சாற்றை எடுத்து அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்து பருகினால புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
- பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் இரத்தம் விருத்தியாகும்.
- வெந்தயம், பச்சரிசி சேர்த்து சமைத்து உப்பு சேர்த்துச் சாப்பிட இரத்தம் விருத்தியாகும்.
- காசினிக்கீரை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
- காரட், காலிப்ளவர் ஆகியவற்றை சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.
நன்றி
நாட்டு மருந்து முகநுால்