நீலவானம், செவ்வானமாக மாறும் அற்புத நிகழ்வை நாளை காணலாம்..


பல ஆண்டுகளுக்கு பிறகு, செவ்வாய் கிரகம், பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருவதால், நாளையும், நாளை மறுநாளும் நீலவானம் செந்நிறமாக மாறும் அற்புத நிகழ்வைக் காணலாம்

பல ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 30,31 தேதிகளில் செவ்வாய் கிரகம், பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருவதால், நீலவானம் செந்நிறமாக மாறும் அற்புத நிகழ்வைக் காணலாம் என ஐதராபாத்தில் உள்ள பிர்லா அறிவியல் மைய இயக்குனர் டாக்டர் பி.ஜி. சித்தார்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தில், குளிர் ஏரியை கண்டுபிடித்துள்ளது, செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் பலகோடி ஆண்டுகளாக உறைநிலை படலமாக இருந்த செவ்வாயில் இந்த ஆய்வின் மூலம் உயிரினங்கள் உருவாகும் சாத்தியக்கூறுகள் என்பது சந்தேகம்தான். எனினும், செவ்வாயின் சுற்றுப்பகுதியில் நடத்திய நுண்ணுயிரியல் ஆய்வுகள் அதை உறுதிப்படுத்தவில்லை.

மாறாக இந்த பிரபஞ்சத்தின் முதல் வாழ்க்கைகான அஸ்திவாரம் செவ்வாய் கிரகத்தில்தான் தோன்றி இருக்க வேண்டும். எனவே, அடுத்தகட்ட விண்வெளி முகாம்களுக்கும்,

குடியிருப்புகளுக்கும் செவ்வாய்தான் சிறந்த இடமாக இருக்க முடியும். இதற்கு அங்கு காணப்படும் திரவ நீரும் நமக்கு மிக சிறந்த சாதகமான அம்சமாக அமைந்துள்ளது என்று பிர்லா அறிவியல் மைய இயக்குனர் டாக்டர் சித்தார்த் தெரிவித்தார்.