BMW காருக்குள் நாக பாம்பு..

08.11.2018 அன்று திருப்பூரில் இருந்து முத்தூர்- க்கு திருமணத்திற்காக,பனியன் கம்பெனி நிறுவனறும் அவர் தம்பி மகனும் 120 கீ.மீ வேகத்தில் வந்துள்ளனர்.

காரை தம்பி மகன் இயக்கி வந்துள்ளார்.

காங்கயத்தை தாண்டும் பொழுது பாம்பின் மேல் கார் ஏறியுள்ளது,ஆனால் அவர் அதை கவனிக்கவில்லை சிறிய குழி என்று நினைத்து வந்து விட்டார் .

முத்தூர் அருகே வரட்டுக்கரை என்னும் ஊர் வரும் பொழுது பாம்பு காரின் முன்னால் படம் எடுத்துள்ளது அதை கண்ட இருவரும் அதிர்ச்சி அடைந்து வரட்டுக்கரை அருகே தென்னங்கரைப்பாளையம் பிரிவு அருகே வெளிச்சத்தில் நிறுத்தியுள்ளனர் horn sound குடுத்துள்ளனர்.

அருகில் உள்ளவர்கள் வந்து பார்க்கும் பொழுது பாம்பு காருக்குள் ஒழிந்து கொண்டது,உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் அவர்கள் வந்து சுற்று முற்றிலும் பார்த்து விட்டு பாம்பு ஓடிவிட்டது என்று சொல்லி சென்று விட்டனர்.

காரில் வந்த இருவருக்கும் சந்தேகம் இருக்க BMW கார் நிறுவனத்திற்கு போன் செய்து கேட்டுள்ளனர்,

அதற்கு அந்த நிறுவனம் காருக்குள் எறும்பு கூட போகாது என்றும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் காலையில் காரை கொண்டு வாருங்கள் பார்ப்போம் என கூறியுள்ளனர் .

அதே போல் காரை காலையில் கோயமுத்தூருக்கு கொண்டு சென்றுள்ளனர் ,அங்கே பார்க்கும் பொழுது left side seat – -க்கு மேட்டுக்கு அடியில் நாகபாம்பு சுருண்டு படுத்துள்ளது.

எனவே நண்பர்களே நாம் காரிலோ பைக்கிலோ செல்லும் போது பாம்பு குறுக்கே வந்தால் மிக மிக கவனமாக செல்வது நல்லது….

பயிர் காப்பீடு அடங்கல் சான்றிதழுக்கு லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி..

இலங்கையில் ஜனநாயக படுகொலை… இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்: ஸ்டாலின்

Recent Posts