போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்: தமிழக அரசு வேண்டுகோள்..

போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரித்தால் அதில் உண்டாகும் புகையால் பல பாதிப்புகள் ஏற்படும் என்பதால் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்தனர்.

ஆனால் தற்போது போகி பண்டிகை அன்று பழைய பிளாஸ்டிக், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம் உள்ளிட்டவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.

மேலும், சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட காரணமாக உள்ளது.

விமான சேவையும் பாதிக்கப்படுகிறது. எனவே இந்தாண்டு போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், போகி பண்டிகை நாளில் 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாதிரி சேகரித்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

எனவே மக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது

சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு..

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு : 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..

Recent Posts