முக்கிய செய்திகள்

அமெரிக்க தூதரகத்துக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

 


சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்தது மண்ணடியைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் கூறியுள்ளார்.