இந்தியா- சீனா இடையேயான எல்லைப்பிரச்சனை குறித்து டோக்லம் பிரச்சனைக்குப் பிறகு மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. டோக்லம் பீடபூமிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததை அடுத்து, இந்திய ராணுவம் எல்லையில் படைகளை குவிந்தது. இதனால், சீனாவும் தனது படைகளை எல்லைப் பகுதியில் குவித்தது.
உலக நாடுகளின் சமரச முயற்சியால், டோக்லம் எல்லையில் இருந்து இரு தரப்பு ராணுவம் பின்வாங்கிய நிலையில், நேற்று, பெய்ஜிங்கில் இந்திய – சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணவும், இருதரப்பும் ஒருங்கிணைந்து செயல்படவும் அமைக்கப்பட்ட குழு 10ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.