முக்கிய செய்திகள்

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்றுஉறுதி..

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ ஊரடங்குக்கு தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தார் , ஊரடங்கு அறிவித்த மாகான ஆளுநர்களையும் விமர்சித்து வந்தார்.

முக கவசம் அணியாமல் வலம் வந்த அவரை சமீபத்தில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் கண்டித்த‌து. இந்த நிலையில், அவருக்கு திடீரென 100 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக காய்ச்சல் ஏற்பட்டதால், அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதன் பின்னரும் தான் நலமுடன் இருப்பதாக அவர் கூறி வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.