பிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: கன்சர்வேடிவ் கட்சி முன்னிலை; போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகிறார்..

Mandatory Credit: Photo by James Veysey/Shutterstock (10343342v) Boris Johnson leaves a property in Westminster Politicians in Westminster, London, UK - 22 Jul 2019

பிரிட்டனில் நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 521 இடங்களில், 273 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 182 இடங்களில் தொழிலாளர் கட்சியும், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி 41 இடங்களிலும்,

தாராளவாத ஜனநாயகவாதிகள் 7 இடங்களிலும்,டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சி 5 இடங்களிலும் பிற கட்சிகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1987ஆம் ஆண்டிற்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

அதேபோல் 1935ஆம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர் கட்சி பெறும் மோசமான தோல்வியாக இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சியை வழிநடத்தப்போவதில்லை என தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோபைன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவர் தனது கட்சி தலைமை பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகிறார்.