பகுஜன்சமாஜ் – சமாஜ்வாடி கட்சிகளின் கூட்டணியில் முறிவு…

உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி உடனான கூட்டணியை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் முறித்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் பாஜகவை வீழ்த்துவதற்காகவே எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர்கொண்டன.

எனினும் எதிர்பார்த்த இடங்களை இரு கட்சிகளாலும் கைப்பற்ற முடியாமல் 17 தொகுதிகளே கிடைத்தன.

இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளுடன், தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்த கூட்டத்தில் அகிலேஷ் யாதவை மாயாவதி குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.

அகிலேஷ் யாதவால் அவரது மனைவி டிம்பிளை கூட தேர்தலில் வெற்றி பெற வைக்க முடியவில்லை என்று அவர் பேசியதாக சொல்லப்படுகிறது.

பல தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சியினர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லை என்றும் மாயாவதி நம்புகிறார். இதனால் இரு கட்சிகளின் கூட்டணி முடிவுக்கு வரலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.