காரைக்குடி: கட்டுமானப் பொருட்கள் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்து காரைக்குடி அகில இந்திய கட்டுனர் சங்கத்தினர் ஐந்து விளக்கு அருகில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அகில இந்தியளவில் கம்பி,சிமென்ட் மின்சாதனப் பொருட்கள் உள்பட கட்டுமானப் பொருட்கள் விலை 40 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. இதனால் கட்டுமானப் பணிகள் மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.ஒப்பந்தம் எடுத்து பணிகள் செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர். கட்டுமானத் தொழிலாளர்கள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மாநில அரசுகள் கட்டமானப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி வைக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை அகில இந்திய கட்டுனர் சங்க காரைக்குடி அமைப்பின் தலைவர் நாகாராஜன் தலைமையில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்