முக்கிய செய்திகள்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து 5வது நாளாக வலுக்கும் மாணவர்கள் போராட்டம்..

மதுரையில் மதுரா கல்லூரி மாணவர்கள் 500 பேர் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.பேருந்து கட்டணத்தை அரசு உடனே திரும்பப் பெற வலியுறுத்தி காரைக்குடியில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கும்பகோணம் அரசு தன்னாட்சி கல்லூரி மாணவ, மாணவிகள் 2000 பேர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தால் ஓட்டேரியில் அரசு கலைக்கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.