தமிழக பட்ஜெட் 2018-19 : உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.269.82 கோடி ஒதுக்கீடு..


தமிழக பட்ஜெட் 2018-19 : உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.269.82 கோடி ஒதுக்கீடு..
தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.269.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,227 கோடி; பால்வளத்துறைக்கு ரூ. 130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் துறைக்கு ரூ.8,916 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
வரும் நிதியாண்டில் 3 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நிர்ணயம்
நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி ரூ.1500-லிருந்து, ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரூ. 48 கோடி செலவில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் விருதுநகர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் ரூ. 80 கோடியில் மகப்பேறு மையங்கள் அமைக்கப்படும்

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 48 கோடி செலவில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் விருதுநகர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் ரூ. 80 கோடியில் மகப்பேறு மையங்கள் அமைக்கப்படும்
ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு
தீயணைப்பு, மீட்பு பணிகள் துறைக்கு ரூ.347.59 கோடி ஒதுக்கீடு