முக்கிய செய்திகள்

தோழர் ஏ.பி.பரதன் நினைவுகள்… : சி.மகேந்திரன்

 

C.Mahendiran tributes to A.B

________________________________________________________________________________________________________________________

 

a.b.barathanஉன் கம்பீரக் குரலுக்கு நாடாளுமன்றத்தில் இடமில்லை. ஒரே ஒருமுறை மகாராஷ்ரா சட்டமன்றம் மட்டும் அளித்தது. ஆனால் உன் குரலின் போர்க்குணத்தை இந்திய தேசத்தின் மலைமுகடுகள் அறியும். அலையெழுப்பும் கடற்கரை பெருவெளிகள் அறியும். விரிந்த பசுமை போர்த்திய சமவெளிகள் அறியும், தலைமுறை சுரண்டலால் ஒடுக்கப்பட்டவர்களின் தாய்மையின் குரல் தோழர் பரதனுடையது என்பதை.

 

ஆனால் இன்று நீ அறிவாயா? மலர் படுக்கையில் படுத்துவிட்ட நீ அறிய மாட்டாய், ஆனால் நாங்கள் அறிகிறோம் அரசியலில் காலமெல்லாம் உன்னை எதிர்த்தவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்து விடடாய் என்பதை.

 

தோழர் பரதனின் பிறப்பு ஒன்றுபட்ட இந்தியாவில், பிரிக்கப்படாத வங்கத்தில் 1925 ஆண்டு, செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி நிகழ்ந்தது. இவர் பிறந்த சில்கட் என்னும் கிராமம் இன்று இந்திய வரைபடத்தில் இல்லை. இந்திய எல்லையை ஒட்டிய பங்களாதேஷில் இருக்கிறது.

தந்தையார் வனத்துறையின் உயர் அதிகாரி. மகாராஷ்டிர மாநிலம் நாக்ப்பூரில் குடியேறிவிட்டார்கள்.
நாக்பூர் பல்கலைக் கழகத்தில் மாணவனாக கல்வியயை தொடர்ந்த போது தான், அரசியலில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

1940 ஆண்டில் மாணவர் அரசியலில் முன்னணியில் நின்ற தோழர் தான் ஏ.பி.பரதன். அன்றைய நாக்பூர் பல்கழகம் பல அரசியல் தலைவர்களை வளர்த்தெடுப்பதில், முன்னணியில் இருந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பின்னர் அமைந்த மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆகிய மாநிலங்களின் முதல் அமைச்சர் உள்ளிட்ட, பல்வேறு அமைச்சர்கள் அந்த காலத்தில் நாகப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள்.

 

பரதன் பல்கலைகழகத்தின் தீவிரம் கொண்ட மாணவத் தலைவர். இங்கு தான், மாணவர் பேரவை தேர்தலில் போட்டியிட்டு மாணவத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

___________________________________________________________________________________________________________