குடியுரிமை போன்ற முக்கிய பிரச்சினையில் ரஜினியின் கருத்து என்ன?-: கார்த்தி சிதம்பரம் கேள்வி..

பெரியார் குறித்து நடிகர் ரஜினி கருத்து கூறுவதற்கு முன்பு குடியுரிமைச் சட்டம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை, காஷ்மீரில் 3 முன்னாள் முதல்வர்கள் சிறையில் வைத்திருப்பது போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து ஆதரவா, எதிர்ப்பா என தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியது:

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. நாட்டை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக இதைக் கொண்டுவரவில்லை.

இந்துத்துவா அடையாளத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையிலேயே இது போன்ற திட்டங்களைக் கொண்டுவர முயற்சி செய்கின்றனர்.

பெரியார் குறித்து நடிகர் ரஜினி கருத்து கூறுவதற்கு முன்பு குடியுரிமைச் சட்டம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை, காஷ்மீரில் 3 முன்னாள் முதல்வர்கள் சிறையில் வைத்திருப்பது போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து ஆதரவா, எதிர்ப்பா என தனது கருத்தை தெரிவிக்க வேண்டும்.

இந்தியப் பொருளாதாரம் மேம்பட முதலில் தேவையை அதிகப்படுத்த வேண்டும்.

ரியல் எஸ்டேட் துறையில் பல்வேறு கட்டணங்களைத் தவிர்க்க முடியவில்லை. மனைகளை வாங்க சலுகை அளிக்க வேண்டும். அப்போது தான் பொருளாதாரம் மேம்படும்.

தவறான அணுகுமுறையால் தான் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுகிறது. மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த திட்டத்தையும் அமல்படுத்தக்கூடாது என்றார்.